search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை கொள்ளை"

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000 பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதன் அருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.

    மேலும் குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
    • யாழின் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருவாலங்காடு:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வசிப்பவர் யாழின் (வயது 31). இவர் அதே ஊராட்சியில் தக்கோலம் செல்லும் சாலையில் இன்டர்நெட் சென்டர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை பாதியளவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து யாழின் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • கல்லா பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    • கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள ஜெய் நகர் மெயின் ரோட்டில் சிப்ஸ் கடை நடத்தி வருபவர் ஜெயபால்.

    இவர் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றார். இன்று காலை வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×